ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

 

அரிமா சங்கத்தின் மலைசிகரம் 2019 மண்டல சந்திப்பு இதன் மண்டல தலைவர் மற்றும் அமைப்பாளரான அரிமா.PMJF. ஸ்ரீநிவாச கிரி ஏற்பாட்டில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை மண்டல தலைவர் மற்றும் அமைப்பாளரான அரிமா.PMJF. ஸ்ரீநிவாச கிரி தலமையில் அரிமா மாவட்ட ஆளுநர் அரிமா MJF வெங்கடசுப்பிரமணியம் துவக்கிவைத்தார். இதில் சிறப்பு பேச்சாளராக ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணனுக்கு அரிமா சங்கத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை மண்டல தலைவர் மற்றும் அமைப்பாளரான அரிமா.PMJF. ஸ்ரீநிவாச கிரி வழங்கினார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கிருஷ்ணன் பேசுகையில், விருது என்பது கோவில் பிரசாதம் போன்றது. அதனால், இந்த விருதினை நான் கோவில் பிரசாதமாக ஏற்றுகொள்கிறேன், என்றார்.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் கலந்துக்கொண்டனர்.