ட்விட்டர் டாப் 5 பட்டியலில் இடம் பெற்ற இந்திய நிகழ்வுகள்

கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள், நடிகர்-நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் குறித்து வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டின் அதிகபட்ச தேடல்களான டாப் 5 தருணங்களை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  பாலிவுட் படங்களை ஓரங்கட்டி தென்னிந்திய திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

அதன்படி, முதல் இடத்தினை நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும், 2-வது இடத்தினை 2019 மக்களவை தேர்தல் முடிவுகளும், 3-வது இடத்தினை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியும், 4-வது இடத்தை மகேஷ் பாபுவின் மகரிஷி படமும் 5-வது இடத்தினை தீபாவளி பண்டிகையும்  பிடித்துள்ளது.

இந்த வருடம் வெளிவந்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட் படங்கள் எதுவும் இந்த டாப் 5 பட்டியலில் இடம் பெறவில்லை. அதற்க்கு மாறாக தென்னிந்திய திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அதிலும் தல அஜித்தின் விஸ்வாசம் படம் முதலிடம் பிடித்தது அஜித் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.