கர்நாடிக் அந்தாக்ஷரி பாட்டுக்கு பாட்டு விளையாட்டு

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவையில் முதல் முறையாக கர்நாடிக் அந்தாக்ஷரி பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி கிக்கானி பள்ளியில் நடைபெற்றது.

இதில் வித்யா கல்யாணராமன், சாயி ரக் ஷித், வசுதா ரவி, சவிதா ஸ்ரீராம், சுசித்ரா பாலசுப்பிரமணியம், ராகவன் சாய் ஆகியோரின் இசை போட்டி மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைந்திருந்தது. இரு அணிகளாக பிரிந்து போட்டா போட்டி போட்ட இவர்களுக்கு இயக்குனராக சுபஸ்ரீ தணிகாசலம் கலந்துக் கொண்டார். கர்நாடிக் அந்தாக்ஷரி பாட்டுக்கு பாட்டு போட்டி விளையாட்டாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் இந்த பாட்டுக்கு பாட்டு போட்டி விளையாட்டை இசையுடன் ரசித்து மகிழ்ந்தனர்.