இந்தியாவில் நிதி வளர்ச்சி சூழலை உருவாக்க ஃபின்டெக் திருவிழா

மும்பை ஃபின்டெக் ஹப் மற்றும் ஃபின்டெக் கன்வெர்ஜன்ஸ் ஆகியவை இணைந்து இந்தியாவின் நிதி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த இயற்கை சூழலை உருவாக்க ‘இந்திய ஃபின்டெக் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

உலக அளவிலான நிபுணர்களை அழைத்து ஆலோசனை பரிமாற்றம் செய்யவுள்ளது. நிதி தொழில் சவால்கள், வாய்ப்புகள், தீர்வுகள் பற்றி விவாதிக்கவுள்ளன. ‘இந்திய நிதி தொழில்நுட்பத் திருவிழா 2020’ மகாராஷ்டிரா அரசு பங்கேற்கிறது.

மகாராஷ்டிரா அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இயங்கும் ஃபின்டெக் கொள்கையின் அடிப்படையில் இது நடத்தப்படுகிறது. இந்நிறுவனம் சர்வதேச வளர்ச்சியில் பங்கேற்றுள்ளது. நிதி சேவையில் டிஜிட்டல் பரிவர்த்தனை, ஆதார் அமைப்பின் அடையாளம் காட்டுதல், பணத்தை சேமிக்க வங்கிக் கணக்கு அல்லது சேமிப்பு வழிமுறைகள், பணப் பரிமாற்றத்துக்கான அளவீடு முறைகளில் (ஐஎம்பிஎஸ், யூபிஐ போன்றவை) வங்கிகளை அனுமதித்தல் விவாதிக்கப்படும்.

இத்திருவிழா மார்ச் 2020 முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 50 நாடுகளிலிருந்து 5000 க்கும் மேற்பட்ட நிதி ஒழுங்குமுறை அமைப்புகள், நிதி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.