புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வாதுவானி செயற்கை நுண்ணறிவு குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

செயற்கை நுண்ணறிவு மென்பொருளைக் கொண்டு ஆய்வின் முதற்கட்டமாக பருத்தி பயிரில் முக்கிய பூச்சி மற்றும் நோய்களுக்கான மேலாண்மை முறைகளை கைபேசி மென்பொருளாக உருவாக்குதற்கான ஒப்பந்தம். கிருஷ்ணமூர்த்தி, பதிவாளர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ராஜேஸ் ஜெயின், வாதுவானி செயற்கை நுண்ணறிவு குழுமம் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் முன்னிலையில்  கையொப்பமானது. இந்த மென்பொருள்  பின்வரும் காலங்களில் விவசாயிகளின் வழிகாட்டியாக இருக்கும்  என்பதில் சந்தேகமில்லை.