கான்பூர் ஐஐடி வைரவிழாவில் கவுரவிக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் !

கான்பூர் ஐஐடி வைரவிழாவில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாடுகளிலிருந்து முன்னாள் மாணவர்களுக்கு தொழில், தொழில் முனைவோர் மற்றும் கல்வியாளர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இந்தியாவின் முதல் ஐஐடியான கான்பூர் ஐஐடி சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்று, வெற்றிகரமாக 60வது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த வைர விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் பல சிறப்புமிக்க முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம், மத்திய ராணுவ துறை செயலாளர் அஜய்குமார் ஆகியோர், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியல் நிஷான்க் ஆகியோரின் முன்னிலையில் கவுரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில், இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிருந்தும் நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மத்திய அரசின் அறிவியல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளர் பேராசிரியர் சந்தீப் வர்மா, மேத்தா பேமிலி பவுண்டேஷன் நிறுவனர் ராகுல் மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவின்போது, தொழில் ரீதியாகவும், தொழில் முனைவோராகவும், கல்வியாளர்களாகவும் உள்ள சிறப்புமிக்க முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கல்வியில் சிறந்தவராக சான்டியாகோ, கலி போர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரி பொறியியல் துறை பேராசிரியர் சங்கர் சுப்ரமணியம், ராசாயம் மற்றும் உயிரி மூலக்கூறு பேராசிரியர் பார்கலே கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பார்க்லே கல்லூரி வேதியியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் நிதேஷ் பல்சரா, ஜார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின்  மின்னியல் மற்றும் கணிணி அறிவியல் துறை பேராசிரியர் ரோத்ஜி ரீஜென்ட்ஸ், ஐசிடிஎஸ் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் மைய இயக்குனர் பேராசிரியர் ராஜேஷ் கோபக்குமார் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், மத்திய ராணுவத்துறை செயலாளர் அஜய் குமார் மற்றும் நியூயார்க் கிளவ்ட் மற்றம் காக்னிஜன்ட் முதுநிலை துணை தலைவர் அரவிந்த் கிருஷ்ணா, சகோசிடோ டெக்னாலஜிஸ் இணை இயக்குனர் மற்றும் தலைவர் ரவிந்திரகுமார் தரிவால் ஆகியோர் சிறப்புமிக்க தொழில் விருதுகளை பெற்றனர். சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை, தாட்ஸ்பாட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் தலைவர் அஜித்சிங் பெற்றார். நாஸ்காம் பவுண்டேஷன், குளோபல் குரூப்வார் சொல்சன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் டெலிகாம் முன்னாள் தலைவர் அருண் ஷெத் டிரஸ்டி மற்றும் சிடிஓ மோஜோ நெட்ஒர்க்ஸ் பிரவின் பகவத் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பீகார் பகல்பூர் கிழக்கு மண்டல டிஐஜி விகாஸ் வைபவ் (ஐபிஎஸ்)க்கு, கே.துபே நினைவு விருது வழங்கப்பட்டது. தனிப்பட்ட நிதி ஆலோசகர் ராகேஷ் சர்மா, மான்ட் கிளேயர் மாநில பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ராம்.பி.மிஸ்ரா ஆகியோர் சிறப்பான சேவைக்கு விருதுகளை பெற்றனர். இளம் முன்னாள் மாணவர் விருது, ரவிகோ தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் தீபக் கார்க் பெற்றார். ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகத்தின் இணை பேராசிரியர் மனுபிரகாஷ், நிறுவனத்தின் பேராசிரியர் கிரிபா சங்கர், மோகினி முல்லிக் மற்றும் பேராசிரியர் மதிரா மாதவ் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியல் நிஷ்ன்க் கூறுகையில், ‘‘இந்த கான்பூர் ஐஐடி நிறுவனத்தை சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றி அமைத்த ஐஐடி கான்பூர் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுக்கள். பல்வேறு துறைகளில் விருதுகளை பெற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். உலகத்தரம் வாய்ந்த பெயர் பெற்ற நிறுவனமாக திகழும் கான்பூர் ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சகம் தொடர்ந்து ஆதரவளிக்கும். முதல் முறையாக நான் இங்கு வந்திருந்தாலும், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் மீண்டும் இங்கு வருவேன்.

கான்பூர் ஐஐடி இயக்குனர் பேராசிரியர் அபய் காரண்டிகர் பேசுகையில், ‘’இந்த கல்வி நிறுவனம் மாபெரும் உயரத்தை அடைய எங்களோடு பயணித்த அனைவருக்கும் நன்றி. முன்னாள் மணவர்கள் இந்த நிறுவனத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். அரசின் ஆதரவுக்கு மிகவும் நன்றி,’’ என்றார்.

கடந்த 1959ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐஐடி கான்பூர், இந்தியாவில் உள்ள ஐஐடிக்களில் 4வது இடத்தை பெற்றுள்ளது. சிறந்த ஆராய்ச்சி வசதிகள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துள்ளன. பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். சமுதாயத்துக்கும் சேவை செய்யும் வகையிலும்,  பயன்படும் வகையில், அறிவியல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதை நோக்கமாக செயல்பட்டு வருகிறது. இதை வெற்றி பெறச் செய்யும் விதமாக, அறிவியல் தொழில்நுட்பங்களின் மாபெரும் மையமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த கல்வி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் 6000 மாணவர்கள் படித்து வருகின்றனர். 1055 ஏக்கரில், 108 கட்டிடங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கவும் வசதிகள் உள்ளன. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், மிக உயர்ந்த விருதுகளை பெற்றுள்ளனர். பத்மஸ்ரீ, இன்போசிஸ் பரிசு, சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது, ஜேசி போஸ் தேசிய விருது, ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது, தேசிய அறிவியல் கல்வி நிறுவனம், இந்திய தேசிய அறிவியல் அகடாமி, இந்திய அறிவியல் அகாடமி, இந்திய தேசிய பொறியியல் அகாடமி, ஸ்வர்ண ஜெயந்தி உதவி தொகை, சர்வதேச திவாஸ் பரிசு, பல்கர்ஸன் பரிசு, மற்றும் ஜியோடெல் பரிசுகளையும் பெற்றுள்ளனர்.