உலகதரமிக்க வசதிகளுடன் ஸ்ரீ வாசவி திருமண மண்டபம்

சிறுவாணி சாலை தெலுங்குபாளையத்தில் ஒரு லட்சம் சதுரடி பரப்பளவில் ஸ்ரீ வாசவி மித்ரா மஹால் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு திறந்து வைத்தார் .

ஸ்ரீ வாசவி மித்ரா எனும் பிரமாண்ட திருமண மண்டபத்தில், ராயல் ஐஸ்வர்யம் ஹால், கிரேண்ட் அக்ஷ்யம் ஹால் என இரண்டு மண்டபங்கள் உள்ளன. மண்டபத்தின் சிறப்புகள் குறித்து சங்கத்தின் முன்னாள் ஆளுநரும், விஎம் எஸ்டேட் தலைவருமான கண்ணன் கூறுகையில், கோவை மாநகரில் குறைந்த செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மண்டபத்தினை திறக்க வேண்டும் என்ற நோக்குடன் எங்களுடைய விஎம் எஸ்டேட் நிறுவனத்தின் 108 இயக்குனர்களின் பங்களிப்புடன் 1 லட்சம் சதுரடி பரப்பளவில் முழு குளிர்தான வசதியுடன் கூடிய ஸ்ரீ வாசவி மித்ரா மஹாலை உருவாக்கி உள்ளோம். இந்த மண்படம் கோவை மைய பகுதியில் இருந்து அதிகபட்சம் 10 நிமிடங்களில் அடைய முடியும். உலகதரமிக்க ஒலி வேலைபாடுகளுடன் கூடிய இந்த திருமண மண்டபத்தில் 1100 பேர் அமரும் வகையில் ராயல் ஐஸ்வர்யம் ஹாலும், 550 பேர் அமரும் வகையில் கிரேன்ட் அக்ஷ்யம் ஹாலும் உள்ளது. கீழ்தளத்தில் 150 கார்களும், வெளியே 200 கார்களும் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் மண்டபத்தில் இருந்தாலும் ஏசியின் தன்மை குறையா வண்ணம் மண்டபத்தினை நவீன தோற்றத்துடன் அமைத்துள்ளோம்.

திருமணம் மட்டுமல்லாது அனைத்து விதமான வீட்டு விழாக்களும், சஷ்டி பூர்த்தி, கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தலாம். அனைத்து நாற்காலிகளும் குசன் அமைப்பு கொண்டவை. உலகதரமிக்க ஒலி வேலைபாடுகளும், எல்இடி திரை வசதிகளையும் கொண்டது இந்த மண்டபங்கள்.

மண்டபத்தின் உள்ளேயே கோயிலை நிறுவி உள்ளோம். ஏசி அறையிலேயே இங்கு அனைத்து விதமான யாகங்கள் நடத்த புதிய தொழில்நுட்பத்தினை உபயோகித்து உள்ளோம். பாரம்பரிய வடிவமைப்புகள் மூலம் புதுமையான தோற்றத்தில் இந்த கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்த சிரமங்களும் இல்லாமல் நவீன வசதிகளை உள்ளடக்கி திருமணத்தை நடத்தும் வகையில் உள்ளது. திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்களே செய்து தருவோம் என்று கூறினார்.

விழாவையொட்டி, மண்டப வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

விழாவுக்கு விஎம் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர் கண்ணன் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சிகளில் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள், வாசவி சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை இணை நிர்வாக இயக்குனர் சேகர், செயல் இயக்குனர்கள் நாகராஜ், ராஜேந்திரன், இயக்குனர்கள் குமார்நாத், தாஸ் குப்தா, செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜூ உள்ளிட்ட இயக்குனர்கள் வரவேற்கின்றனர்.