29-ம் தேதி ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து பல ஆண்டுகள் முன்பே வெளியாகியிருக்க வேண்டிய எனை நோக்கி பாயும் தோட்டாதிரைப்படம் இறுதியாக நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இருந்தாலும், பல்வேறு பிரச்னைகளால் திரைக்கு வராமல்  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரசிகர்களை ஏமாற்றியது.

இறுதியாக கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு, செப்டம்பர் 6-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவித்தது. இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாலும், படம் வெளியாகுமா என்ற கேள்வியுடன் மீம்ஸ்களையும் வெளியிட்டனர். அதேபோல் மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நவம்பர் 29-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.