குறைந்த கட்டணத்தில் விதை தரம் பரிசோதனை

விதைகளின் தரத்தை ரூ.30 கட்டணத்தில் பரிசோதனை செய்துகொள்ளலாம் என கோவை, விதை பரிசோதனை நிலைய விதை பரிசோதனை அலுவலர் கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் தரமான விதைகளை விதைப்பதன் மூலம் நல்ல மகசூல் பெறலாம். இதற்காக வேளாண் விதை பரிசோதனை நிலையத்தில், புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிறரகக் கலப்பு ஆகிய 4 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. விவசாயிகள், விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள விதைகளின் தரத்தை அறிய பகுப்பாய்வு முடிவுகள் பயன்படும். விதை பரிசோதனைக்கு வரும் மாதிரிக்கு ரூ.30 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது மழையை பயன்படுத்தி விதைகளை விதைப்பதற்கு தயாராக உள்ள விவசாயிகள் விதை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் இத்தருணத்தில் விவசாயிகள் விதை இருப்பு வைத்திருக்கும் விதைகள், தனியார் நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்ட விதைகள், அரசு சார்ந்த விதை மையங்களில் வாங்கப்பட்ட விதைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்ட விதைகளை விதைப்பதற்கு முன் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.