வாழ்த்துகள் வானதி!

அன்று மாலை இனிமையான ஒன்றாக அமைந்தது. சீன வானொலி தமிழ்ப் பிரிவினர் மற்றும் சீன ஊடக நண்பர்களுக்கு வானதி சீனிவாசன் விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு மார்க்.கம்.கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், திமுகவைச் சேர்ந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன், பாஜகவின் இல.கணேசன் ஆகிய மூவரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். மூவரும் அரசியல்வாதிகள் என்பதற்கு அப்பால் தீவிர வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள்.

குணசேகரன், ரங்கராஜ் பாண்டே, சுகிதா, ஹேமா ராகேஷ், போன்ற இன்றைய நட்சத்திரங்களொடு சந்தியா

ராஜகோபால், ஜெயஸ்ரீ சுந்தர், ஸ்ரீகாந்த் போன்ற எந்நாளும் ஜொலிக்கும் முன்னாள் நடசத்திரங்களும் வந்திருந்தனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு ரோல் கொடுத்திருந்த வானதி, சுருக்கமான வரவேற்புரையைத் தவிர மேடைக்கே வராமல் இருந்தார்.

கட்சி வித்தியாசம் பாராமல், ஊடக முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல், தலைமுறை வேறுபாட்டைக் கருதாமல், அவர் எல்லோரும் அயலக ஊடகவியலாளார்களைப் பாராட்ட அழைத்திருந்த பண்பு மகிழ்ச்சியளிக்கிறது.

வாழ்த்துகள் வானதி!

தகவல் : பேஸ் புக்