சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு துவக்க விழா

கோவை,சங்கரா கல்வி நிறுவனம் தனது MBA, MCA, M.COM துறையின் முதலாமாண்டுத் துவக்க விழாவை, சங்கரா வளாகம் TKP கருத்தரங்கில் சிறப்பாக நடத்தியது. விழாவில் MBA இயக்குனர் பி.சுதாகர் வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கரா கல்வி குழுமங்களின் தலைமைச் செயலர் டி.பி.ராமச்சந்திரன் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், துணைச்செயலாளர் நித்யா ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் டாக்டர்.எச்.பாலகிருஷ்ணன்மற்றும் கோவை பிராப்பர்டி இன் மேலாண்மை இயக்குனர் ஆச்சல் ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்றனர். மேலாண்மைத் துறைத் தலைவி பேராசிரியர் பிரியா கல்யாண சுந்தரம் நன்றியுரையாற்றினார்.