மாற்றங்களிலும் மாறாதது

நம் வாழ்வின் அடிப்படை உலகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டே  இருக்கிறது. இந்த மாற்றத்தை மற்ற முடியாது. அப்படி பரிணாம வளர்ச்சியில்மாறி மறந்த பலவற்றில் ஒன்று தான் இந்த அஞ்சல். தகவல் பரிமாற்றத்திற்கு நிலையாக நம் கண்முன்னே நின்று கொண்டிருப்பதும் இது தான். உலகம் எவ்வளவோ வளர்ச்சிபெற்றாலும், இன்றும் தபால் துறை விழித்துக்கொண்டு செயலாற்றி கொண்டுதான் இருக்கிறது.

இன்றளவும் அஞ்சல் துறை நம் அன்றாட வாழ்வில் நமக்கும் வணிகத்திற்கு பயன்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ வகையான கைப்பேசிகளும், தகவல் பரிமாற்ற செயலிகளும் நம்முன் உலாவி கொன்றிருந்தாலும், அதில் நமக்கு ஆயிரம் செய்திகளும், தகவல்கலும் வந்துசென்றாலும், நம் வீட்டிற்கு மாதம் ஒருமுறையாவது எதாவது ஒன்றிக்காக தபால் வந்து கொண்டுத்தான் இருக்கிறது. இது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாமல், நம் நாட்டினர்களிடையே இது நினைவுகளின்  தழும்பாக இருக்கிறது. இதன் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தாலும், நினைவுகள் மனதில் சிலையாக கரையாமல் இருக்கும்.

தனிமனித வாழ்வில் அஞ்சல் எப்படி முக்கியமோ அதே போல் வணிகத்திற்கு உதவுகிறது. இதனை கௌரவித்து, பெருமைசேர்க்கும் விதமாக அக்டோபர் 9 உலக அஞ்சல் தினமாக கொண்டப்பட்டு வருகிறது. இதனை உலகத்தில் 150 நாடுகளுக்கு மேல் கொண்டாடி வருகிறது.

உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்திய அஞ்சல் துறை 1764இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.

1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது.1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.