இந்துஸ்தான் கலை கல்லூரியில் ரத்த தான முகாம்

இந்துஸ்தான் கலை கல்லூரியில் பன்னாட்டு வணிக துறை மற்றும் நாட்டு நலப்பணி துறை, ஒற்றுமை தடங்கள் சேவை, அரிமா சங்கம், சாந்தி சமுக சேவை மையத்துடன் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற இம்முகாமில் கல்லூரி தாளாளர், முதல்வர், நாட்டு நலப்பணி துறை அலுவலர், மற்றும் துறை தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர்.