சமூக பணியில் புதிய ரோட்டராக்ட் கிளப்

ஆர்.வி.எஸ். தொழில் நுட்பக்கல்லூரியும், ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியும் கோவை ரோட்டரி சென்ட்டீனியல் கிளப் மூலமாக ரோட்டராக்ட் கிளப் நிறுவுதல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக Rtn.PHF ஹென்றி அமல்ராஜ் கலந்து கொண்டார். தலைமை விருந்தினராக Rtn.MPHF செந்தில் ராஜகோபால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நடராஜன் செயல் உரை ஆற்றினார். Rtn.MPHF அருண் ஆறுமுகம் பாராட்டு உரை வழங்கினார். மேலும் விழாவிற்கு PHF. ராபின்சன், இயக்குநர் ஆர்.வி.எஸ். டெக்னிகல் கேம்பஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

இவ்விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் இந்திய மருத்துவ கழகத்துடன் இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 67 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இவ்விழாவின் இறுதியில் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கத்தின் மூலமாக இன்ட்டராக்ட் கிளப் நிறுவப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை சிவில் துறைத்தலைவர், மோகன்தாஸ் காந்தி, ஒருங்கிணைத்தார்.