மூன்று முப்பெரும் விழா

கோவை அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 86 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் தினம், கல்லூரியின் 166 ஆம் ஆண்டு விழா மற்றும் சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தொடங்கும் முன் மேடையேறிய கல்லூரி மாணவர்கள், நம் நாட்டின் பாரம்பரிய இசையான பறை இசையால் வந்திருந்தோரின் கவனங்களை தன் பக்கமாக ஈர்த்தனர் .
நிகழ்ச்சியின் தொடக்கமாக இக்கல்லூரியின் முன்னாள் மாணவிகள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்க தலைவர் மருத்துவர் ரத்தினசாமி வரவேற்புரை வழங்கினார்.
அரசு கலைக் கல்லூரியின் முதல்வர், சித்ரா
துவக்கவுரை வழங்கினார்.
நலம் அறக்கட்டளை நிறுவனர் அன்பரசன் கல்லூரியின் வெற்றி மலரை வெளியிட்டார். இவர் கல்லூரியின்  முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.
கோவை மண்டலம் கல்லூரி கல்வி இணை இயக்குனர், பொன்முத்துராமலிங்கம் தலைமையுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் மருத்துவர் ரத்தினசாமி திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கூடுதல் மாவட்ட நீதிபதி  கருணாநிதி, பிரபல எழுத்தாளர், க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் மற்றும் பணி ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சுப்ரமணியம் ஆகியோருக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருந்தினை வழங்கினார்.
சிறந்த முன்னாள் மாணவர் விருது பெற்றவர்களை வாழ்த்தி வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் மற்றும் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் சிந்தனைக்கவிஞர், தமிழ்ச்செம்மல் கவிதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விருது பெற்ற முன்று முன்னாள் மாணவர்களும் ஏற்புரை வழங்கினார்கள்.
 இறுதியாக முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர், வழக்கறிஞர் ஜெயசந்திரன் நன்றியுரை வழங்கினார்.