மக்களுடன் நெருங்கியிருக்கும் பா.ஜ.க.

தற்போதைய பா.ஜக. அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய அரசாகவும் உள்ளது என அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ‘கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 5 % ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி. 12 சதமாகக் குறைந்துள்ளது. மேற்கு தமிழகத்தின் நீண்ட நாட்கள் கோரிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மாபெரும் ஷாப்பிங் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசுப் பணி நியமனங்களில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இரயில்வே பணிகளில் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் குறித்து முழு விவரம் வெளிவந்தவுடன் விளக்கம் அளிக்கிறேன் என்றார்.