தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு

பாரம்பரிய நெசவாளர்கள் நலம் காக்கும், தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தேவாங்கர் சமூகத்தினர் லட்சக்கணக்கில் திரண்டு கொடிசியா மைதானம் முழுவதும் நிறைந்து காணப்பட்டனர்.

தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு நிறுவனர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ தயானந்தபுரி சுவாமிஜி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தமிழக அரசு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.