விழிப்புணர்வு பயணம்

சாலை மற்றும் சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையிலிருந்து லடாக் வரை இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணத்தை இயற்கை பவுண்டேசன் சார்பில் 4 இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த பயணத்தை தொடக்கி வைக்க சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பீளமேடு காவல் ஆய்வாளர் ஜோதி, இயற்கை பவுண்டேசன் நிறுவனர் வினோத் ராஜ், கோவை மாவட்ட துனை  அரிமா ஆளுநர் தர்மராஜ், அரிமா அக்குனி சிறகுகள் தலைவர் ஸ்ரீதர், இயற்கை பவுண்டேசன் நிர்வாகி ராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஹரி பிரகாஷ், ஜோஸ்வா, சுஜித், இனியன் ஆகியோர் பைக் பயணத்தை மேற்கொண்டனர்.