தமிழ்த்துறையின் பாரதி விழா

வால்பாறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதி விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநர்  பொன்முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையுரையாற்றினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் குணசுந்தரி இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார். கோவை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் அன்புசிவா அவர்கள் பாரதியின் அகமும் புறமும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பாரதியின் பெருமைகளையும் பாரதியின் வாழ்க்கை முறைகளையும், கவிதையின் மூலமாகவும், பாட்டின் மூலமாகவும் மக்கள் மனதில் சுதந்திர உணர்வை ஊட்டியதை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார். 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ஜெயந்தி தொகுத்து வழங்கினார்.