இனிது.. இனிது.. வாழ்தல் இனிது

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஆன்காலஜி துறையின் சார்பாக ரோஸ் டே கொண்டாட்டம் நடைபெற்றது.

புற்று நோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் நாளாக இந்த ரோஸ் டே கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அருண் என். பழனிசாமி, ஆன்காலஜி துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்து கொண்டார். இவர் இனிது.. இனிது.. வாழ்தல் இனிது என்ற தலைப்பில் உரையாடினார். மனிதன் நம்பிக்கையோடு இருந்தால் எந்த நோயயையும் வென்று விடலாம். மனிதனுக்கு தன்னம்பிக்கை ஒன்று தான் அடிக்கடி குறைகின்ற ஒன்று. இதனை சரி செய்தாலே போதும் எதையும் வென்று விடலாம். இதற்கு ஒருவர் ஆறுதல் கூறினாள் போதும் தோல்வியில் இருந்தும், நோயில் இருந்தும் விடுபடலாம்.

நெருக்கடி இருக்கும் பொதும் ஒருவன் ஆனந்தமாக இருகிறான் என்றால் அவன்தான் உண்மையான மகிழ்ச்சி உடையவன். அதனால் மகிழ்ச்சியாக இருங்கள், மற்றவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களையும் ஆனந்தமடைய செய்யுங்கள், என்றார். இதனை தொடர்ந்து பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் புற்று நோயில் இருந்து விடுபட்டவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.