உங்கள் கைகளால் மரம் நடுங்கள்

கோவை ஓய்ஸ் மென்ஸ் கிளப் சார்பில், சிங்காநல்லூர் உழவர் சந்தையில் கோவையை சோலையாக்கிட இணைந்திடுங்கள் என்று பசுமை பூமி திட்டத்தின் மூலம் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக விதை பந்து பெட்டி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை ஜெயா மகேஷ் உடல் சிற்ப சிகிச்சை மையத்தின் நிறுவனர் ஜெயா மகேஷ் மற்றும் ஓய்ஸ் மென் இன்டர்நேஷனல், லெப்டினன்ட் மண்டலம் -1ன்  இயக்குநர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் தலைவர் செல்வ ராஜ், திட்ட துணை தலைவர் சதிஷ் குமார், திட்ட இயக்குநர் செல்வ குமார் மற்றும் ஓய்ஸ் மென்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 24,000 விதை பந்து பெட்டிகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட விதை பந்து பெட்டியில் 6 விதை பந்துகள் உள்ளன. இவைகள் செம்மண், நாட்டு மாட்டு சாணம் மற்றும் பஞ்சகவியம் சேர்த்து, இவைகளின் நடுவில் நாவல் மர விதை, வேம்பு விதை, மலைவேம்பு விதை, புங்கை விதை, வாகை விதை என 10 வகையான நாம் நாட்டு மர விதைகள் இதில் உள்ளது. இந்த விதை பந்துகள் வன பகுதிகளில், ஆறு, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளின் சுற்று பகுதிகளில் வீசலாம். வறண்ட பகுதிகளில் இதனை வீசப்பட்டாலும் 1 ஆண்டு வரை இதன் முளைக்கும் திறன் நிலைத்து நிற்கும். இந்த பந்துகளை வறண்ட பகுதியில் வீசிய 1 ஆண்டுகளில் மழை பெய்தால் இது முளைக்க ஆரம்பித்து விடும். இது 60 முதல் 70 சதவிகிதம் வரை, வறண்ட பகுதிகளில் முளைக்கும் திறன்  கொண்டது.
இதனை விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் ஆர்வத்துடன் பெற்று சென்றனர்.