கே.ஐ.டி-யில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் தொடக்க விழா மற்றும் குன்னூர் ‘லார்சன் & டூப்ரோ லிமிடெட், ஸ்விட்ச் கியர் பயிற்சி மையம் (எஸ்.டி.சி)’ நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஒரு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கம் “இன்ஜினியர்களின் பங்கு தொழில்துறை மற்றும் சக்தி தரம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் சவால்கள் ” என்ற தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, குன்னூர் ‘லார்சன் & டூப்ரோ லிமிடெட், ஸ்விட்ச் கியர் பயிற்சி மையம் (எஸ்.டி.சி)’ யின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், விருந்திர்களாக சவூதி அரேபியா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம், பி.எஸ் பல்கலைக்கழகம், உமாசங்கர் மற்றும் சக்தி, தரம் மற்றும் ஆற்றல் திறன் ஆலோசகரான ஹசன் மைதின் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் கல்லூரி துணைத்தலைவர் இந்து முருசகேன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ் ,மாணவர் அமைப்பு டீன் சுரேஷ், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் மைதிலி,பேராசிரியர்கள் பல்வேறு துறைத்தலைவர்கள் மற்றும் மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுப்பிரமணியன், இந்த ஒப்பந்தம் மூலம் அந்த நிறுவன இன்ஜினீர்கள்,கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள் பரஸ்பர தொழில் நுட்ப பரிமாற்றம், ஆராய்சிகள்,பயிற்சிகள் மூலம் புதுமையான கண்டுபிடிப்புகள் உருவாக்க முடியும் என்று கூறினார். மற்றும் இன்றய சூழலில்  எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சைன்ஸ், மெக்கானிக்கல், உள்ளிட்ட பல்வேறு பொறியியல் பிரிவுகளில் நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையிலும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார், மேம்படுத்த வேண்டும் துலைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத் திட்ட வரைவுகள் மற்றும் தொழிற்ச்சாலைகளில்  மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் தொழில்நுட்ப பயிற்சி எடுத்தல்,அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் மேற்கொண்டு தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்தல் என மாணவ நலன் சார்ந்தவற்றை பாடத்திட்டத்தோடு இணைந்தளிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறாக கே.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி, மேற்குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் இந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது மேலும் தொழில் துறை எதிர்பார்ப்புகள் மற்றும் கல்வி பாடத்திட்டங்களுக்கு இடையேயான இடைவெளிகளை இணைப்பதர்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிச்சயமாக உதவும்.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தில் KIT-கல்லூரி துணை தலைவர் இந்துமுருசகேன்,  V. சுப்பிரமணியன், Manager- Training, LARSEN & TOUBRO LIMITED,SWITCH GEAR TRAINING CENTRE(STC), குன்னூர் ஆகியோர் கையெழுத்திட்டனர். சிறப்பு விருந்தினர் உமாசங்கர், Renewable Energy Lab,PS University, சவூதி அரேபியா அவர்கள் கூறுகையில், புதுப்பிக்கத்தக் ஆற்றல் (Renewable energy) இயற்கை வளங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின் அழுத்த மூலம் நாம் இயற்கை வளங்களை பாதுகாப்பததுடன், இயற்கைக்கு  தீங்கு விளைவிக்காத பல புதிய கண்டுப்பிடிப்புகள் மாணவர்கள் முயல வேண்டும் என்று கூறினார். ஹசன் மைதின், ஆலோசகர், Power Quality & Energy Efficiency அவர்கள் கூறுகையில் பொறியாளர் அதிக அளவில் தங்களது நேரத்தை புதிய அறிவியல்  கண்டுபுடிப்பதற்காக ஆராய்ச்சியில் தங்களை ஆர்வத்துடன் ஈடுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.