என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் டாக்டர்.என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி செயலர் தவமணி பழனிச்சாமி, சால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் துரைசாமி, கூட்டு நிர்வாக இயக்குநர் ராஜேஷ் துரைசாமி, இயக்குநர், ஜெயபால் மற்றும் பல்வேறு துறைத்தலைவர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் பொற்குமரன் அவர்கள் வரவேற்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து கல்லூரி செயலர் தவமணி பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றுகையில் பல்வேறு திட்டங்களின் மூலம் பகிர்வு மற்றும் அறிவை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு துறைகளின் மூலம் அனுபவத்தைப் பெறுவதற்கு உதவும் என்று கூறினர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கண்டுபிடிப்பு மையம் மாணவர்களுக்கும் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கும் இடையே நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் உள்ள அனைத்து துறைகளின் சமீபத்திய புதுமையான முன்னேற்றங்களைப் பற்றி பொறியாளர் சால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், இயக்குநர், ஜெயபால், எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் துரைசாமி, ராஜேஷ் துரைசாமி, ஆகியோர் தங்கள் அனுபவத்தையும், மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த தொழில்நுட்பங்களை கற்க வாய்ப்புகள் பல உள்ளன என்று அவர்கள் எடுத்துரைத்தனர்.