இடைத்தரகர்கள் இல்லாத பெண்கள் மாத சந்தை

விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் இல்லாமல் பெண்கள் நடத்தும் மாத சந்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றுவருகிறது.

விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே விலையை நிர்ணயம் செய்வது இவர்கள் தான். பொதுவாக இவர்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பொருட்களுக்கு விலையை நிர்ணயிப்பதால் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இதன் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் அல்லாத, இடைத்தரகர்களை ஒழிக்கும் விதமான சந்தை சென்னையில் பெண்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.  இதில் பெண்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் நேரடியாக சந்தைக்கு வந்து விற்பனை செய்கின்றார்கள்.

இது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இங்கு காய்கறிகள், பழங்கள், மூலிகை மருந்துகள் போன்றவைகள் விற்கப்படுகிறது. இந்த சந்தையில் 10 லட்சம் வரை விற்பனையாகிறது என்கின்றனர். நகரத்தில் இருப்பவர்களுக்கு இது கிராம சந்தையின் அனுபவத்தை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இங்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே யாரும் இல்லாததால், இது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் அளிக்கும் விதமாக இருக்கிறது.

தகவல்: bbc தமிழ்