பிரச்சனைகளுக்கு இது தீர்வு அல்ல !

இன்று (10.9.19) உலகளவில் உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் விதமான அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவது, மன அழுத்தம், குற்றவுணர்வு, உடல்நலக்குறைவு, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளதாக கருதப்படுகின்றன. இது உலகில் உள்ள பலருக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனைகள் தான். ஆனால் இதனை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம்  இல்லாதவர்கள் தான், இந்த முடிவினை எடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், வெற்றி ஒன்று தான் வாழ தகுதியுடையவர்களுக்கு என்ற எண்ணம்  கொண்டவர்கள், தோல்வியும் ஒரு வெற்றி தான்  என்பதை புரிந்து கொள்ளாதவர்கள். பிரச்சனைகளுக்கு இது தீர்வு அல்ல. என்பதை மனதில் நிலையாக நிறுத்தி கொள்ளுங்கள்.

இந்த எண்ணம் வருகிறது என்றால், அவர்கள் மனிதர்களிடம் பேசுவதில்லை என்று தான் அர்த்தம். இன்றைய மின்னணு சாதனங்களும், சமூக வலைத்தளங்களும், இணைய தளங்களும் உங்களை தனிமைப்படுத்துகிறது. இதிலிருந்து விடுபடுங்கள். இந்த அடிமை தளத்திலிருந்து வெளியேறுங்கள். இதன் மூலம் உங்கள் அறிவு வளரலாம். அதே நேரம், உங்களது தனிமையும் வெறுப்பும் உங்களுக்கு தெரியாமல் மாறிவிடும். இன்றைய சமூகத்திற்கு இணையாக வாழலாம். ஆனால், அதில் மூழ்கிவிடாதீர்கள்.

நம்மிடம் இந்த நான்கு குணங்கள் அல்லது எண்ணங்கள் இருந்தால், இந்த முடிவு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பட்டியலில் கடைசியில் கூட இருக்காது.

ஒன்று சுயக்கட்டுபாடு: இது மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று. இந்த சுய கட்டுப்பாடு, உங்களுக்கு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ராஜா. ஒரு நாட்டை ஆளும் மன்னன் எப்படியோ அப்படி தான் சுயகட்டுப்பாடு கொண்டவர்கள். யாருக்கும் பயப்பட தேவை இல்லை. அதனால் உங்கள் வாழ்வில் தோல்வி வந்தாலும், வெற்றி வந்தாலும் இந்த இரண்டும் உங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.

இரண்டாவது, மற்றவர்களோடு எந்த இடற்பாடுகளும் இல்லாமல் பழகுவது. எப்படி யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்வது. இப்படி யாராலும் வாழ முடியாது. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால், அதனை சரி செய்து விடுங்கள். இதனை மையமாக கொண்டு, பிரச்சனையை வளர்க்க கூடாது. இதை செய்தாலே மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டாலும், அவர்களுடன் நட்பு நீடிக்கும்.

மூன்றாவது, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை. நம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்கு எதன் மீதுதோ, யாரோ ஒருவர் மீதோ நிச்சியமாக இருக்கும். அப்படி அதன் மீதும், அவர்கள் மீதும் வைக்கும் நம்பிக்கையை உங்கள் மீதும், உங்கள் வாழ்க்கையின் மீதும் வைத்து பாருங்கள். உங்கள் வாழ்வின் பயணம் இதுவரை யாரும் பயணிக்காத தூரம் இன்பத்துடன் இனிமையாக இருக்கும். தொந்தரவுகளோ துயரங்களோ ஏற்பட்டாலும், வாழ்வின் மீது வைத்த நம்பிக்கை உங்களை கைவிடாது.

நான்காவது சுய மதிப்பீடு: சுய மதிப்பீடு என்பது தன்னைத்தானே மதிப்பிட்டு கொள்வது. குறைவாகவோ அல்லது அளவிற்கு அதிகமாகவோ இல்லை. உங்கள் மதிப்பை நியாயமாகவும், சரியாகவும் நிர்ணயித்து அது குறைவாக இருந்தால், அதன் எப்படி அதிகரிப்பது என்றும், சரியாக இருந்தால் இதனை எப்படி நிலை நிறுத்துவது என்றும், அதிகமாக இருந்தால் இதனை எப்படி பயனுள்ளதாக பயன்படுத்துவது என்று யோசித்து, அதன் படி நடந்தாலே போதும், இது உங்களை தோல்வியின்றி பயணிக்க தூண்டும்.

இதனை எப்பொழுதாவது பயன்படுத்துவது சோம்பேறித்தனம். எப்பொழுதும் உபயோகிப்பது அடிமைத்தனம். இதனை தேவைக்கேற்ப பயன்படுத்தினால், நம் வாழ்க்கையும், எண்ணங்களும், முடிவுகளும், நமது பயணத்தை அதிகரிக்க வழி வகுக்கும்.