இந்தியா – நேபாளம் பெட்ரோலியம் பைப் திட்டம்

இந்தியாவில் பீகாரில் உள்ள மோதிஹாரி – நேபாளத்தின் அம்லேகஞ்ச் நகர் இடையிலான பைப் மூலம் பெட்ரோல் விநியோக திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி, டில்லியில் இருந்தவாறு  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நேபாள பிரதமர் மற்றும் அதிகாரிகள் காத்மண்டுவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி பேசுகையில், குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லை தாண்டிய பெட்ரோலியம் பைப் திட்டத்தை நிறைவேற்றியது மகிழ்ச்சி. குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே, இந்த திட்டம் நிறைவு பெற்றுள்ளது. இதற்கான பெருமை, நேபாளத்தின் பிரதமருக்கும், நேபாள அரசுக்கும் சேரும். 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெரிய பூகம்பத்திற்கு பின்னர், அந்நாட்டு அரசு மீட்பு பணிகளை துவக்கியது.

இதற்கு, அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில், இந்தியா உதவி செய்தது. நமது கூட்டு முயற்சியால், நேபாளத்தின் கூர்கா மற்றும் நுவால்கோட் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் பேசினார்.