என்.சி.சி. மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா

இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் என்.சி.சி. மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் என்.சி.சி. மெடிக்கல் கம்பெனியின் கமெண்டர் மேஜர் தினேஷ் டேவிஸ், கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஸ்பாபு, முதல்வர் பொன்னுசாமி, என்.சி.சி. கேர் டேக்கர் கருணாநிதி மற்றும் கல்லூரியின் என்.சி.சி.மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சில் கல்லூரி வளாகதில் வேம்பு, புங்கை, அரசமரம், பாதாம், மற்றும் பூச்செடிகள் என 200 செடிகள் நடைபெற்றது. இதனை மூன்று மாணவர்களுக்கு ஒரு மரம் என்ற வீதம் மூன்று ஆண்டுகள் இதனை பராமரிக்கும் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்றாண்டுகள் முடித்த பின்பு இவர்களின் இந்த மரத்தை பாதுகாக்கும் பணி இளைய என்.சி.சி.மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும். இதில் ஏதேனும்  ஒரு குழுவின் பராமரிப்பில் இருக்கும் மரம் பராமரிப்பின்றி பட்டுபோனால் இதனை ஈடுகட்ட 10 மரங்கள் நடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.சி.சி. கேர் டேக்கர் கருணாநிதி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.