பி. எஸ். ஜி. மருத்துவமனையில் இலவச முடக்குவாத ஆலோசனை முகாம்

பி. எஸ். ஜி. மருத்துவமனையில் முடக்குவாதம் குறித்த இலவச ஆலோசனை முகாம்  நடைபெற்றது.
இதில் முடக்குவாததின் அறிகுறிகளான கால்களில் மூட்டு வீக்கம், வலி, காலையில் கை, கால் மூட்டு இறுக்கம் 15 நிமிடங்களுக்கு மேல் இருத்தல், நாள்பட்ட இடுப்பு வலி, ஒய்விற்கு பிறகும் நீடித்தால், வலி
மாத்திரைகள் தொடர்ந்து தேவைப்படுதல், மூட்டு வலியுடன் கூடிய காய்ச்சல், தோல் இறுக்கம், விரல் நுனிகளில் வலி, நிறம் மாறுதல், புண் ஏற்படுத்தல், எடை குறைதல், முச்சு திணறல் போன்றவைகளுக்கு முடக்கவாதவியல் துறை மருத்துவர் சிவகுமார் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். இதனுடன் இம்முகாமில் இலவசமாக எலும்பு சத்து பரிசோதனையும் செய்யப்பட்டது.

இம்முகாமிற்கு கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், உடுமலைப்பேட்டை ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இம்முகாம் மூலம் பயன்பெற்றனர்.
கோவை மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட இதில் சுமார் 45 பேர் பங்குபெற்று இலவச மருத்துவ பரிசோதனையும், மருத்துவரின் ஆலோசனையும் பெற்றனர்.