பேஸ்புக்கில் இனி இதை பார்க்க முடியாது !

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் தான் பெருமளவு நேரத்தை செலவிடுகின்றனர். ஒரு சிலர் இதற்கு அடிமையாகவே மாறி விடுகின்றனர். பேஸ்புக்கில் ஒரு பதிவை போடும் நபர், அந்த பதிவிற்கு எத்தனை லைக்குகள், எத்தனை சேர்கள், எத்தனை கமெண்டுகள் வருகிறது என்பதை முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர்.

அந்த பதிவிற்கு லைக்குகள் குறைவாக வாங்கும் பட்சத்தில், சில பேர் மனஅழுத்ததிற்கு ஆளாகும் அளவிற்கு சென்றுவிடுகின்றனர். இந்த விபரீதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேஸ்புக் நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் கூறியிருப்பது பின்வருமாறு:-

“லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் வசதியை சோதனை முறையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். எனினும் இந்த சோதனை இன்னும் தொடங்கப்படவில்லை.

தங்களின் பதிவுகள் எத்தனை பேரைச் சென்று சேர்ந்துள்ளன, எவ்வளவு லைக்குகள் கிடைத்துள்ளன என்பது குறித்து ஃபேஸ்புக் பயனர்கள் பலர் கவலை கொள்கின்றனர். அவர்களின் அழுத்தத்தைப் போக்க இவ்வாறு முடிவு செய்துள்ளோம்.” இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஒருவரின் பதிவிற்கான லைக்குகளை அவர் மட்டுமே தெரிந்துக்கொள்ளும் வன்னம் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இன்ஸ்டா கிராமைத் தொடர்ந்து, பேஸ்புக்கிலும் இந்த வசதி தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.