ஜெ.வாக ரம்யா கிருஷ்ணன்

`குயின்’ வெப் சீரிஸின் படப்பிடிப்பு இரண்டு யூனிட்டாகச் செயல்பட்டு வருகிறது. ஜெ கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கெளதம் மேனன் இயக்குகிறார்.

ஏற்கனவே பலர் ஜெ. வின் வாழ்க்கை கதையை படமாக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் சத்தமில்லாமல் இதனை வெப் சீரிஸாக உருவாக்குகிறார். இதில் ஜெ. வாக, படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்திரம் இன்றும் நம் மனதில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருக்கிறது. அதன் பின் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக அனைவரையும் ஆட்டிப்படைத்தார். இன்னிலையில் இவர் ஜெ. வேடத்தில் நடிப்பது இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மறக்கமாவே முடியாத கதாபாத்திரமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், எம்.ஜி.ஆர், சிவாஜியோடு திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகள், அ.தி.மு.க-வில் கொள்கை பரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது, முதல்வராக இருந்தது, இறந்தது என்று அனைத்தையும் படமாக்கி படத்துக்கு `குயின்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார். ஜெ பயோபிக்கில் மொத்தம் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர். ஏற்கெனவே `படையப்பா’ படத்தில் நீலாம்பரி வேடத்தில் நடித்து பரபரப்பை உண்டாக்கிய ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். இவரின் ஒருநாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் சம்பளமாம்.

விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த `இவன் வேற மாதிரி’ படத்தில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா, சோபன்பாபு கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

`குயின்’ வெப் சீரிஸின் படப்பிடிப்பு இரண்டு யூனிட்டாகச் செயல்பட்டு வருகிறது. ஜெ கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கெளதம் மேனன் இயக்குகிறார். இன்னொரு பக்கம் சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் `விஸ்வாசம்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவில் `கிடாரி’ பிரசாத் முருகேசன் டைரக்‌ஷன் செய்கிறார்.

நன்றி : விகடன்