அரசு மருத்துவமனையில் புகார் பெட்டி

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறைபாடு, முறைகேடு போன்றவைகளை பற்றி நோயாளிகள் புகார்மனு அளிக்க மருத்துவமனை வளாகத்தில் 7 இடங்களில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய், இதய கோளாறுகள், விபத்து போன்ற 20க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் இங்கு உள்ளது. இங்கு தினமும் 7 ஆயிரம் புறநோயாளிகளும், 1500 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள், நோயாளிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் இவர்களின் சிகிச்சை குறைபாடு, முறைகேடு போன்ற புகார்களை மனுவாக கொடுக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன் பேசுகையில், மருத்துவமனையில் உள்ள பிரச்சனைகள் குறித்து நோயாளிகள், பொது மக்கள் அதிகாரிகளிடம் எப்பொழுது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்ற சூழலால் இல்லாத காரணத்தால், புகார் தெரிவிக்க வருபவர்கள் தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் புகார் தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த  புகார் பெட்டி மூலம் பெறப்படும் புகார்களுக்கு வரந்தோறும் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் அதிகாரிகளை மக்கள் சந்திக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, என்றார்.