வாழ்க்கை ஒரு பரமபதம் – ஆர்.வி. ரமணி

பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஒய்ட் கோர்ட் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சங்கரா கண் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆர்.வி. ரமணி கலந்து கொண்டார்.

விழாவில் இந்திய மருத்துவ கவுன்சிலின் நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் அமுதா, மருத்துவ கல்லூரியின் டீன் ராமலிங்கம் மற்றும் பேராசிரியர் சாந்தகுமாரி ஆகியோர் முதன்மை வகித்தனர்.

விழாவின் தொடக்கமாக டீன் ராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். அதன் பிறகு மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்  ஒய்ட் கோர்ட் வழங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர் ஒய்ட் கோர்ட் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசுகை‌யி‌ல், உன்னத தொழிலில் காலெடுத்து வைக்கும் உங்களுக்கு மிக பெரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அப்துல் கலாம்  கூறியது போன்று கனவு காணுங்கள், அது உறக்கத்தில் வருவதாக இருக்க கூடாது, அது உங்களை தொந்தரவு செய்வதாக இருக்க வேண்டும். இதில் கவனம் செலுத்துங்கள். இந்த வயதில் கவனம் சிதறத்தான் செய்யும். அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். சச்சின் டெண்டுல்கர் போல தினமும் பயிற்ச்சி மேற்கோள்ள வேண்டும். வாழ்கை ஒரு பரமபதம், இதில் பல தடைகள் பாம்புகளாக வரலாம், அதனை தாண்டினால் தான் வெற்றி பெற முடியும். இயற்கை ஒரு சிறந்த குருவாக இருக்கிறது. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள் சிப்பிகளாக, உங்களுக்கான வாய்புகள் நிச்சயமாக வரும். அதனை நீங்கள் பெற்றுக்கொண்டால் முத்துகளாக உருவாகலாம். பொறுமை மிக முக்கியமான ஒன்று. இறுதியாக நாம் நாட்டிற்கு வணக்கம் கூறி விடை பெற்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*