இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவி

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவி ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில் ஹரிஷினி இடைநிலைப் பிரிவில் முதலிடம் பெற்றதுடன், சென்னையில் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற மாநில அளவிலான இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. கோவை சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட அளவிலான இடைநிலைப் பிரிவில் ஹரிஷினி முதலிடம் பெற்றார். இரண்டாம் இடத்தை லக்ஷனா பெற்றார். மாநில அளவில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கின்ற ஹரிஷனியையும், இரண்டாம் பரிசு மற்றும் ஊக்கப்பரிசுகளைப் பெற்ற மாணவிகளையும் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி, பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.