விதை பந்து விநாயகர்

பெங்களூருவை சேர்ந்த இளைஞர் விநாயகர் சதுர்த்திகாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலையை, காகிதக் கூழ் மற்றும் விதை பந்துகளை வைத்து தயாரித்து அசத்தியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா, வருடா வருடம் இந்தியாவின் பல மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதற்காக சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பல்முக விநாயகர், பாகுபலி விநாயகர், தற்பொழுது என ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான விநாயகர் சிலைகள் சந்தைக்கு வருவது வழக்கம். தற்பொழுது பப்ஜி விநாயகர் சிலையும் வந்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவர், காகிதக் சூழ் மற்றும் விதைகளை வைத்து விநாயகர் சிலையை செய்து அசத்தியுள்ளார்.

முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் ஆன இந்த விநாயகர் சிலையில் செயற்கை பொருளான பெயிண்ட் கூட பயன்படுத்தப்படவில்லை. இந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர். தற்போது சில குறைவான எண்ணிக்கைகளிலே சிலைகளை தயாரித்த இளைஞர், ஆர்டர் வருவதைப் பொறுத்து கூடுதல் எண்ணிக்கையில் சிலைகளை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

விநாயகர் சிலை மட்டுமல்லாது காகிதக் கூழால் செய்யப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்டவைகள் கூட தயாரிப்பதாக தெரிவித்தார். மேலும், மரங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இதுபோன்று யோசித்ததாகவும் தான் தயாரித்த விநாயகர் சிலை கரைந்த பின்னர் செடியாய் முளைக்கும் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.