அதிநவீன ஆடம்பர பங்களாக்கள் அறிமுகம்

ஜெயபாரத் ஹோம்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் வழங்கும் ‘யோக முத்ரா’ அதிநவீன ஆடம்பர பங்களாக்கள் அறிமுக விழா ஞாயிறு (01.09.2019) அன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  திரை நட்சத்திரம் காஜல் அகர்வால்,  சின்னத்திரை புகழ் ஈரோடு மகேஷ், சூப்பர் சிங்கர் சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் செளந்தர்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தென் தமிழகத்தில் கட்டிட கட்டுமானத் துறையில் முன்னணியில் திகழும் ஜெயபாரத் ஹோம்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனம் தற்போது யோக முத்ரா என்னும் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட பங்களா வீடுகள் உள்ளடக்கிய புதிய புராஜெக்ட்டினை அறிமுகம் செய்கிறது. இது சரவணம்பட்டியில், எஸ்.என்.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த அறிமுக விழா செப்டம்பர் மாதம் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையில் நடைப்பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் திரை நட்சத்திரம் காஜல் அகர்வால் கலந்து கொண்டு மாடல் வில்லாவினை திறந்து வைக்கிறார். சின்னத்திரை புகழ் ஈரோடு மகேஷ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து சூப்பர் சிங்கர் சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் செளந்தர்யா ஆகியோர் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

சர்வதேச தரத்தில் அனைத்து அதிநவீன சொகுசு வசதிகளையும் ஒருங்கிணைத்து நுட்பமான கட்டிட கலை நயத்துடன் வடிவமைக்கபடுகிறது. வழக்கமான தனி வீடுகள் வடிவமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நவீன கட்டிடக் கலையின் எழில்மிகு தோற்றத்தில் 4 மற்றும் 6 படுக்கை அறைகளை உள்ளடக்கிய 15 ஆடம்பரமான பங்களாக்கள் நேர்த்தியுடன் உருவாக்கப்படுகின்றன. அறிமுக விழா சிறப்பு சலுகையாக ஒரு சதுர அடி ரூ.4500/- என்ற விலையில் இங்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

பிரபல வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், பொழுதுபோக்கு இடங்கள், ஷாப்பிங் மால்கள், கோவில்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு மிகவும் அருகாமையில் அமைந்திருப்பது யோக முத்ரா புராஜெக்ட்டின் தனிச்சிறப்பாகும்.

இதன் முக்கியம்சமாக, நீச்சல் குளம், ரூஃப் பாப் பார், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புல்வெளி, ஆக்ஸிஜன் பிளான்டேஷன், வரவேற்பு அறையுடன் கூடிய தனி அலுவலகம், ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறை, ஒவ்வொரு வீட்டிற்கும் 4 கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, ஜாக்கிங் டிராக், பணியாளர்கள் தங்கும் விடுதி, ப்ரைவேட் ஹோம் தியேட்டர், பேஸ்கர் பால் ஓப்பன் கோர்ட், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, ஒவ்வொரு வீட்டிற்கும் லிப்ட் வசதி மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் கொண்டுள்ளது.