சினைப்பை சிகிச்சை கிளினிக் துவக்கம்

வாழ்வியல் முறையால் வரும் மகப்பேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு திட்டத்தை பெண்களுக்காக துவக்கப்பட்டுள்ளது.

10 பெண்களின் ஒருவருக்கு, சரியான காலத்தில் மாதவிடாய் வருவதில்லை. சீரற்ற முறையில், நீண்ட நாள் வருவது என்ற பிரச்சனைகள் உள்ளன. இவர்களில் 50% பேர் மட்டுமே கண்டறியப்படுகின்றனர். இது ஒரு நோய் அல்ல, உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் வருகிறது. இதனால் இந்த மாதவிடாய் ஒழுங்கின்மை ஏற்படுகிறது. இதற்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது சரியான தீர்வு அல்ல. இது பிரச்னையை மேலும் சிக்கலாக மாற்றும்.

இது குறித்து மகளிர் மைய தாய்மை கிளினிக் இயக்குனர் டாக்டர் மிருதுபாஷிணி கூறியதாவது கர்பப்பை பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான மேலாண்மை முறைக்கு பெரும் இடைவெளி உள்ளது. பெண்கள், பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் கால அளவு, உடல் பருமன், இளம் பெண்களுக்கு தேவைற்ற முறையில் முடி வளர்தல், சக்கரை நோய், குழந்தை பேறின்மை, மாதவிடாய் காலத்தில் அதிக உதிர போக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் மற்றும் இருதய நோய் ஏற்படுகிறது. இத்தகைய சூழலில், அறிகுறிகள் வாயிலாக மூல காரணங்களை கண்டறிந்து, சிகிச்சை பெற வேண்டும். பல சமயங்களில் இந்த பிரச்னைக்கு தீர்வாக  அறுவை சிகிச்சை மேற்கொள்வது மேலும் பிரச்சனையை உருவாக்கும். நோயை புரிந்து கொண்டு, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே இப்பிரச்சனைகளை தீர்க்க முடியும். இதற்க்கான வழிகாட்டுதல்களை மகளிர் மைய மருத்துவமனை மேற்கொள்கிறது, என்றார்.