பற்களை பலப்படுத்தும் எள் !

பால் பொருட்கள், பாலினால் தயாரிக்கப்படும் பொருட்கள், ஈறுகளில் உள்ள பிரச்சனைகளை குறைத்து பற்களின் வெண்மையை உயர்த்தவும், பாதுகாக்கவும் செய்கிறது.

பற்களிலுள்ள எனாமலை பாதுகாத்தும், வலுவூட்டுவதும் மட்டுமல்லாமல் செடார் எனும் கெட்டியான பாலாடை பற்களை வெண்மையாக்குவதிலும் தூய்மையாக்குவதிலும் சாதாரண பாலாடையை விட சிறந்த பலன் தரவல்லது.

எள் பற்களில் உள்ள துணுக்குகளை அழித்து, பற்களின் எனாமலை வளர்ச்சியடையச் செய்கிறது. இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளதால் பற்களையும், ஈறுகளையும் சுற்றியுள்ள எலும்புகளை பாதுகாக்கிறது.

சூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்களையும் உற்பத்தி செய்கின்றன. சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடவும் மற்றும் பற்களில் கறை படிவதை தவிர்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு சேர்ந்த கலவை சிட்ரிக் அமிலம் இருப்பதால் எலுமிச்சையுடன் உப்பு சேர்ந்த கலவையை கலந்து குடித்தால் பற்களை பளீச்சென்று மாற்ற முடியும்.

காய்கறிகள் வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகளான ப்ராக்கோலி, கேரட், பூசணி போன்றவை பற்களின் எனாமல் வளர உதவி செய்கிறது. இவ்வகை காய்களை பச்சையாக உண்ணுவது நல்லது.

கால்சியம் கலந்த உணவு, கால்சியம் கலந்த உணவை உட்கொள்வதால் பற்களை வலுவடையச் செய்து பற்களின் அமைப்பை பாதுகாக்கிறது.