மாணவர்கள் மன்றத் துவக்க விழா

கே பி ஆர்.பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை சார்பில் மாணவர்கள் மன்றம் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எல்.அண்ட் டி நிறுவனத்தின் பொறியியல் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி துறையின் பொதுமேலாளர் ராஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் பொம்மண்ண ராஜா மற்றும் முதன்மை செயலர் ஏ.எம்.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறையின் தலைவர் விஜயலட்சுமி அவர்கள் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார். கல்லூரியின் முதல்வர் பொம்மண்ண ராஜா அவரது சிறப்புரையில் சிவில் இன்ஜினியரிங் துறையில் தற்போது உள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் எதிர் காலங்களில் இத்துறையில் உள்ளபெரும் வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் அவரது உரையில் வரலாற்று காலம் முதல் சமீபகாலம் வரை இத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் படிநிலைகளை எடுத்துரைத்தார். சமீப காலங்களில் சாலை, பாலங்கள், நகர அமைப்பு, விமான நிலையம், கப்பல் தளம் போன்ற கட்டமைப்பு வசதிக்காக அரசு பெரும் தொகையை ஒதுக்குகிறது என்று குறிப்பிட்டார். மேலும் சிவில் இன்ஜினியர்களுக்கான தேவை மற்றும் வாய்ப்புகள் பற்றியும், ஒரு சிறந்த சிவில் பொறியாளர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றியும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர் மன்ற பிரதிநிதிகளை அறிமுகம் செய்யப்பட்டு நெறிபடுத்தப்பட்டனர்.