அன்பாக பேச கற்றுக் கொள்ளுங்கள்

-அலோக் பிரகாஷ் மிட்டல்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்புவிழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் 2017ம் ஆண்டுகளில் இளங்கலைப் பாடப்பிரிவுகளிலும் 2018ம் ஆண்டுகளில் முதுகலை பாடப்பிரிவுகளிலும் பயின்ற 1300 மாணவ-மாணவிகள் பட்டம்பெற்றனார். இதில் 19 மாணவ-மாணவிகள் பாரதியார் பல்கலைக்கழக அளவில் தரவாரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரொக்கப்பாரிசும், சான்றிதழ்களும், கேடயங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதிகண்ணையன், செயலர் பிரியாசதிஷ்பிரபு, டிரஸ்டி சக்திவேல், முதல்வர் பொன்னுசாமி மற்றும் சிறப்பு விருந்தினராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உறுப்பினர் செயலாளர் அலோக் பிரகாஷ் மிட்டல் கலந்து கொண்டார்.

இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினர் இவர் பேசுகையில்“ மாணவர்கள், பேராசிரியர்கள் தொடர்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய இக்கட்டான சூழ்நிலையில் சரியான முடிவை எடுக்க கற்றுக் கொள்ளவேண்டும். மற்றவர்களுடன் ஒத்துழைத்து அன்பாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்குண்டான கடின உழைப்பை மேற் கொண்டால் அதற்குண்டான பலன் நிச்சயம் கிட்டும். நீங்கள் பணிபுரியும் வேலை எதுவாயினும் அவ்வேலையை புரிந்துகொண்டு முழு ஈடுபாடுடன் செயல்படவேண்டும். கடின உழைப்பே உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்” என்று கூறினார். மேலும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதிகண்ணையன், செயலர் பிரியாசதிஷ்பிரபு, டிரஸ்டி சக்திவேல், முதல்வர் பொன்னுசாமி, அனைத்து துறைப்பேராசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.