போட்டியில் பங்கேற்க ஆன்லைன் பதிவு இணையதளம் அறிமுகம்

கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம், நாட்டில் முதல் முறையாக போட்டிகளுக்கு ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் இணைய தளத்தை கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்க உறுப்பினர்கள் அறிமுகம் செய்தனர்.

மூத்தோர் தடகள போட்டிகளை நடத்தும் கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம், முன் பதிவினை எளிமைபடுத்த இந்த ஆண்டு புதியதாக www.kdmaa.in என்ற இணையத்தளத்தை அறிமுகம் செய்தது.

நாட்டிலேயே முதல் முறையாக போட்டிகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையை கொண்ட முதலாவது சங்கமாக இது திகழ்கிறது. போட்டியில் பங்கேற்போர், ஆன்லைனில் பெயர், பங்கேற்கும் போட்டி, வயது உள்ளிட்ட விபரங்களை தாங்களாகவே பதிவு செய்வதில், கட்டணத்தையும் செலுத்த முடியும். ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதோர் செப்டம்பர்1, 2019 முதல் மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை பதிவு செய்யலாம். ஞாயிறு விடுமுறை. பதிவு செய்து கொள்ள இறுதி நாள் செப்டம்பர்20, 2019.

தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் மூத்தோர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க தகுதி தேர்வை, கோவையில் செப்டம்பர் 22 அன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஆண் பெண் இருபாலரும், 30 வயதுக்கு மேற்பட்டோர் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில், 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 5000மீ, 10,000மீ, 80எம்எச், 100எம்எச், 110எம்எச், 300 எம்எச், 400எம்எச், எஸ்.சி பிரிவில் ஓட்டப்பந்தயமும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மூன்றளவு தாண்டுதல், போல்வால்ட், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சுத்தியில் எறிவது, 5 கி.மீ, 10 கி.மீ நடைப்பந்தயம் போன்ற போட்டிகளும் நடக்கின்றன. இப்போட்டிகளில் ஒருவர் மூன்று போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

போட்டியில் பங்கேற்று முதல் இரண்டு இடங்கள் பிடிப்போர், திருச்சியில் நடைபெற உள்ள தமிழ்நாடு முத்தோர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். மூன்று தடகள போட்டியிலும் பங்கேற்று முதல் இடம் பெறுபவர்கள் திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு முத்தோர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க இலவச அனுமதி வழங்கப்படும்.

கடந்த ஆண்டு சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். இந்த வருடம் நடைபெறும் போட்டிகளில் சுமார் 800 பேரும், அதில்  பெண்கள் சுமார் 130 பேர் கலந்து கொள்வார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.