சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ குணங்கள்

வறண்ட இடங்களிலும் காடுகளிலும் வளரகூடிய தாவரம் நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளி ஆகும். சப்பாத்திகள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக மிக்கிய காரணம், இதில் உள்ள கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்துள்ளது.

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க சப்பாத்தி கள்ளி பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி பழம் வெயிலில் ஏற்படும் நாவறட்சிக்கும், வெயிலில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் உதவி புரியும்.

சப்பாத்தி கள்ளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும். ஞாபக மறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம்.

உடல் பருமனை குறைக்க சப்பாத்திக் கள்ளி பழத்தில் உள்ள உயர்தரமான நார்ச்சத்து பெரிதும் உதவி செய்கிறது. சப்பாத்திக்கள்ளியை நன்கு பசையாக்கி சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், வலி கண்ட இடத்தில் மேற்பூச்சாகப் பூசி வைக்க விரைவில் வீக்கம் வற்றும்.

சப்பாத்திக் கள்ளியை முட்கள் நீக்கி சுத்திகரித்து பசையாக்கி 20 கிராம் அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர உஷ்ணமாக மலம் வெளியேறுதல் மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் பல்வேறு தொல்லைகள் இல்லாமல் போகும்.