புது வரவுடன் அதே கூட்டணி

போனி கபூர், எச்.வினோத் ஆகியோர் கூட்டணியில் அஜித்தின் அடுத்த 60 வது திரைப்படம் உருவாக உள்ளது. இதில் வில்லனாக அருண் விஜய், மற்றும் முக்கிய வேடத்தில் ஜான்வி கபூர் ஆகியோர் இணைந்து உள்ளனர்.

அஜித் தனது அடுத்த படத்துக்காக உடல் எடையைக் குறைத்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப்  படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்துக்குப் பின் அஜித்தின் 60-வது படத்திலும் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29-ம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பைக் ரேஸர் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருக்கும் இந்தப் படம் ஆக்‌ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக உருவாக உள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்துக்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அருண் விஜய் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்லிம் ஆக மாறி வரும் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.