எதிர்காலத்திற்கான மகத்தான பணியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களும் சிறுதுளி அமைப்பும் இணைந்து 73 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வெள்ளலூர்க் குப்பைக் கிடங்கைத் தத்தெடுத்து அப்பகுதியில் தூய்மைப் பணியும் மரக்கன்றுகளைப் பராமரித்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் ஆகியவற்றைச் செய்யும் துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் முதன்மை இயக்கு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை மற்றும் வணிக அதிகாரி சுவாதிரோகித் மற்றும் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், சிறுதுளி அமைப்பின் திட்ட இயக்குனர் சரவணன் மற்றும் சிறுதுளி அமைப்பினர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியற் கல்லூரி முதல்வர் அலமேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியற் கல்லூரி முதல்வர் அலமேலு வரவேற்புரை வழங்கினார். எஸ்.என்.ஆர் கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 700 நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளையும் பராமரிப்புப் பணிகளையும் செய்தனர். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து இதுபோன்ற பணிகளைச் செய்யவுள்ளனர்.