மதம் இல்லை மனிதம் தான் முக்கியம்  என்பதற்கு ஒரு உதாரணம்

மதம் முக்கியம் இல்லை மனிதம் தான் முக்கியம் என்று, மலேரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்து பெண்ணிற்கு இறுதி சடங்கு செய்த இஸ்லமியர்கள்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹர்ஹுவா பகுதியை சேர்ந்த 19 வயதான சோனி என்பவர் காலரா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் குடும்பத்தில் இவர் தான் முக்கிய பங்கு வகிப்பவர். காரணம் இவர் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர், தாய் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்.  இந்நிலையில் சோனியின் இறப்பு அவர்கள் குடும்பத்தில் பேரிடியாக இருந்திருக்கிறது, இறுதிகாரியங்கள் செய்வதற்கு பணமில்லாமல் அவரது தாயும் தந்தையும் தடுமாறியுள்ளர்.

இதனையடுத்து அந்த பகுதியில் அருகில் வசிக்கும் இஸ்லாமியர்கள், சோனியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, இறுதி சடங்குகளுக்கான வேலைகளை செய்துள்ளனர். தலையில் குல்லா அணிந்தபடி, தங்கள் தோள்களில் அந்த பெண்ணின் சடலத்தை மயானம் வரை தூக்கி சென்றனர். அதோடு, இந்து மதத்தில் பின்பற்றப்படும் சடங்குகளை செய்ததோடு “ராம் நாம் சத்யாஹை” என்று கூறியவாறே அந்த பெண்ணை தூக்கி சென்றனர். மதவேறுபாடுகள் இல்லாமல் மனித நேயதோடு நடந்த இந்த பெண்ணின் இறுதிச்சடங்கு பல்வேறு தரப்பிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.