கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை 72 ஆவது சுதந்திரதினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது  . இதை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், வ.உ.சி., மைதானத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இம் மைதானம், மாநகர போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மேடை அமைக்கும் பணி தற்போது துவக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோல், மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்கள், பஸ் ஸ்டாண்டுகள், வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோவை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் ‘மெட்டல் டிடெக்டர்’ அமைக்கப்பட்டு பயணிகளும், உடமைகளும் சோதனை செய்யப்படுகின்றன.

ரயில்வே தண்டவாளங்களில், வெடிகுண்டு செயலி ழப்பு மற்றும் ரயில்வே போலீசார் ரோந்து பணி மேற்கொள்கின்றனர். கோவை சர்வதேச விமானநிலையத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

Source : https://bit.ly/2yXcZuf

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*