முதலிடத்தில் சன்னி லியோன்..

“கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அளவில் இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடத்தை பிடித்துள்ளார். பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் சன்னி லியோன்.

கூகுள் ட்ரெண்ட்ஸ் அடிப்படையில், சன்னி லியோன் தொடர்பான வீடியோக்களை அதிகம் பேர் தேடியுள்ளனர். மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலத்தில் இருந்து அதிகமானோர் சன்னி லியோன் குறித்து தேடியுள்ளனர்.

இதுகுறித்து சன்னி லியோன், ‘இந்த தகவலை என்னுடன் பணியாற்றுபவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். எப்போதும் எனக்கு துணையாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. இது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்

கடந்த ஆண்டும் கூகுள் தேடலில் சன்னி லியோன் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://bit.ly/2KKLFF0