இந்துஸ்தான் கலை கல்லூரியில் உலக உடல் உறுப்பு தான தின விழா

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் அரிமா சங்கம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம், கோவை கிளை சார்பாக உலக இளைஞர் தினம் மற்றும் உலக உடல் உறுப்பு தான தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர் முகமது ராஃபீக்கான் வரவேற்புரை வழங்கினார். இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் அவர்கள் விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். செயல் அறங்காவலரும்  செயலருமான  பிரியா சதீஷ்பாபு அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி அவர்கள் இவ்விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றினார்.

அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர் செல்வபிரியா,  சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். விழாவின் சிறப்பம்சமாக  கோவை கிளை இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் வினோத் ராஜ்குமார் மற்றும் கோவை கிளை இந்திய மருத்துவ சங்க துணை செயலாளர் நரம்பியல் பிரிவு மருத்துவர் ராஜேஷ் பாபு, ஆகியோர் “உடல் உறுப்பு தானம் – மகத்துவம் “, “உடல் உறுப்பு மாற்றம், அதன் பலன்கள் மற்றும் ” மூளை சாவு ” என்கின்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர் பிரபு,  நன்றியுரையாற்றினார்.