கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது !

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கி வருகிறது. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். இன்று வெளியிடப்பட்ட விருது வென்றவர்கள் அறிவிப்பில், உத்தரகாண்ட் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது.

2018, 66வது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் மகாநடியில் நடித்ததற்காக ‘கீர்த்தி சுரேஷ்க்கு’ வழங்கப்பட்டுள்ளது.

பாரம் என்ற தமிழ்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கே.ஜி.எப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு ஆயுஷ்மான் குரானா, விக்கி கவுஷல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த ஹிந்தி மொழி படத்திற்கான தேசிய விருது ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ‘அந்தாதுன்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்மாவத் படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ஜிகல் தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ உரி ‘ திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த சமூக படத்திற்கான விருது அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் வென்றது.

சிறந்த துணை நடிகை விருது ‘பதாய் ஹோ’ இந்தி படத்தில் நடித்த சுரேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.