சின்ன சின்ன வாய்ப்புகளை, பெரிதளவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் – பாலகிருஷ்ணன்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாக துறை சார்பாக, துறையின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறையின் தலைவர் ராம்குமார், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி மற்றும் சிறப்புவிருத்தினராக ராயல் ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முதன்மை வகித்தனர். துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கமாக சிறப்பு விருந்தினர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். அனைவரையும் வரவேற்று துறையின் தலைவர் ராம்குமார் வரவேற்புரை வழங்கினார். இதனை தொடர்ந்து துறையின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

கல்லூரி முதல்வர் பொன்னுசாமி சிறப்புரை வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்புவிருத்தினர் ராயல் ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், வாழ்க்கையை பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, பட்டம் பெற்ற பின்னர் நீங்கள் வாழும் வாழ்க்கை, 3 பகுதியாக பிரித்து  அதில் கல்லூரி வாழ்க்கையில் தனக்கு கிடைத்த அனுபவகங்களை பகிர்ந்திட்டார். அதுமட்டுமல்லாமல் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த காலகட்டத்திற்கும், தற்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தவறு செய்திடுமோ என்று பயப்படமால் செய்து, அதில் தவறு வந்தால் அதிலிருந்து கற்று கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால குறிகோள்களில் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களுக்கு வரும் சின்ன சின்ன வாய்ப்புகளை, பெரியளவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை செய்து முடிக்க முடிக்க இது உங்களுக்கு அடிப்படையான நம்பிக்கையை கொடுக்கும், என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி சிறப்பு விருத்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார்.