வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள்

கோவை கே பி ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியும் மான்ஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியும் இணைந்து நடத்திய உலகளாவிய வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள் நிகழ்வு கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை கல்லூரியின் முதல்வர் எஸ்.பாலுசாமி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியின் ஆசிரியர் ரத்ணசாய்சரண்யன் இந்நிகழ்வைப் பற்றி விரிவானதொரு உரையை நிகழ்த்தினார். மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் ராஜேஷ் வாசுதேவன் வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள் பற்றிய முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

உலகலாவிய காந்தி குடும்பத்தின் எஸ்.பி.வருமா வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்களான ஏழ்மை, பசி இன்மை, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான சக்தி, நல்ல பணிகள், மற்றும் பொருளாதாரம், புதுமை மற்றும் நல்ல உள்கட்டமைப்பு, சமமின்மையை குறைத்தல், நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள், வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல், அமைதி மற்றும் நீதி நிலையான வளங்குன்றா வளர்ச்சிக்காக அமைதியான யாவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல் அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல் எல்லா நிலைகளிலும் சிறப்பான பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குதல் செயல்திறமிக்க பதிலளிக்கும் பொறுப்புடைய யாவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களை எல்லாம் மட்டங்களிலும் ஏற்படுத்துதல் நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்புகள் நிலையான அபிவிருத்திக்காக செயல்பாட்டு முறைகளை பலப்படுத்துதல் வளங்குன்றா வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டமைப்புகளுக்கு புத்துயிர் அளித்தல் போன்றவற்றைப் பற்றி மாணவர்களுக்கு விரிவாக கூறினார்.

இளைஞர் சேவையின் மாவட்ட தலைவரும் உலகளாவிய காந்தி குடும்பத்தின் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமாகிய ஹென்றி நிகழ்விற்காக நன்றியுரை கூறினார்.இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.